மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

கேன்ஸ் திரைப்பட விழா: நயன்தாரா கலந்து கொள்ளாதது ஏன்?

கேன்ஸ் திரைப்பட விழா: நயன்தாரா கலந்து கொள்ளாதது ஏன்?

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாததுக்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

பிரான்சில் இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் இந்திய சினிமாவின் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ் சினிமாவில் இருந்து கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாதது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

அக்‌ஷய் குமார், மாதவன், கமல்ஹாசன், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் பெயர் பட்டியலில் நடிகை நயன்தாராவின் பெயரும் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அப்படி வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் இன்னொரு பக்கம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான கொண்டாட்டத்திற்கு இந்த ஜோடி தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க திருப்பதி சென்ற இந்த ஜோடி அங்கு தங்களது திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் பா.இரஞ்சித், ஐஷ்வர்யா ராய் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட ட்ரைய்லர் மற்றும் மாதவனின் ‘ராக்கெட்டரி- தி நம்பி விளைவு’ திரைப்படம் உள்ளிட்ட பல இங்கு திரையிடப்படுகிறது.

ஆதிரா

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

புதன் 18 மே 2022