மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

180 நாடுகளுக்குப் பரவிய கொரோனா!

180 நாடுகளுக்குப் பரவிய கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,14,000 ஆக உள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலக அளவில் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசியமின்றி வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் எச்சரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பினால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது உலகின் பல்வேறு பகுதிகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அந்நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உலக அளவில் 4,14,000 பேர் வரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 18,500 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஐரோப்பாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக இத்தாலியில் கொரோனாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தோன்றிய சீனாவை விட இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் முதலில் தாக்கிய உகான் மாகாணத்தை விட இத்தாலியின் லம்போர்டியா மாகாணம் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. விரைவில் ஸ்பெயினின் மாட்ரிட் மாகாணம் அதனை மிஞ்சும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 33 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகள் விரைவில் இத்தாலியைப் போன்ற சவாலை எதிர்கொள்ளும் என்பதற்கான அறிகுறிதான் இது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில்தான் முதலில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொடக்கத்தில் இருந்ததை விட கொஞ்சம் கொஞ்சமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் நியூயார்க் அதிலிருந்து மாறுபட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு கட்டுக்குள் உள்ளது. உலகெங்கிலும் 78 நாடுகளில் குறைந்தது 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு சீன பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது உலக அளவிலான பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தகவல்: பைனான்சியல் டைம்ஸ்

எழில்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon