கொரோனா: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!

health

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதால், சமூகப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துபாயிலிருந்து தமிழகம் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் கடந்த 2ஆம் தேதி காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், ஒரு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுபோலவே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த 60 வயது நபர் ஏப்ரல் 1ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஏப்ரல் 5) காலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மதுரை, வி்ழுப்புரம், தேனியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 75லிருந்து 77ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 267ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490ஆகவும், தமிழகத்தில் 485 ஆகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *