Wரிலாக்ஸ் டைம் : பீட்ரூட் பக்கோடா!

health

முந்தைய காலத்தில் பீட்ரூட்டின் இலைகள் மட்டும்தான் ஆரோக்கியமானது என்று நினைத்துக்கொண்டிருந்தனர். பின்னர், ஒட்டுமொத்த காயிலும் ஊட்டச்சத்துகள் ஏராளமாக நிறைந்துள்ளது என நிரூபிக்கப்பட்டுப் பயன்படுத்தத் தொடங்கினர். அந்த வகையில் இந்த பீட்ரூட் பக்கோடா மழைக்காலத்துக்கேற்ற சிறந்த சத்தான ரிலாக்ஸ் டைம் டிஷ் எனலாம்.

**எப்படிச் செய்வது?**

பீட்ரூட் ஒன்று, கேரட் மூன்றை நன்றாகச் சுத்தம் துருவிக்கொள்ளவும். வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் துருவிய பீட்ரூட், கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன், அரிசி மாவு 20 கிராம், உப்பு தேவையான அளவு, கடலை மாவு 50 கிராம் என்று அனைத்தையும் சேர்த்து பிசறவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு இதை எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்தால் பீட்ரூட் பக்கோடா ரெடி.

**சிறப்பு**

பீட்ரூட் உடலை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, ரத்த சோகையைப் போக்கும். கேரட் பார்வைக் கோளாறுகளைச் சரிபடுத்தும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *