oகிச்சன் கீர்த்தனா: கொள்ளு கோஃப்தா கிரேவி!

health

குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு எது பிடிக்கும், அவர்கள் உடல்நலத்துக்கு எது நல்லது, சமையல் பட்ஜெட் எவ்வளவு என பலவற்றையும் பேலன்ஸ் செய்து சமைத்துப் பரிமாறுவது என்பது குடும்ப நிர்வாகிகளுக்கு கைவந்த கலை. இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டு கிடைக்கும்போது உண்டாகும் மன நிறைவே அலாதிதான். அத்தகைய உணர்வுக்கு இந்த கொள்ளு கோஃப்தா கிரேவி உதவும்.

**என்ன தேவை?**

கொள்ளு – 100 கிராம் (12 மணி நேரம் ஊறவைக்கவும்)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

**கிரேவிக்கு**

தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்)

மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

**தாளிக்க**

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

சீரகம் – கால் டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

**பொரிக்க**

எண்ணெய் – 200 கிராம்

**மேலே தூவ**

கஸூரி மேத்தி, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

ஊறிய கொள்ளுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சமையல் சோடா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, தக்காளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பொரித்த கோஃப்தாக்களை போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

கஸூரி மேத்தி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: **ஸ்வீட் கார்ன் எள் கோஃப்தா கிரேவி!**](https://www.minnambalam.com/health/2021/01/18/2/sweet-corn-gravy-kitchen-keerthana)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *