மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 செப் 2016

பெரம்பலூர் சின்ன வெங்காய விவசாயிகள் கோரிக்கை!

பெரம்பலூர் சின்ன வெங்காய விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தைப் பொருத்தவரை வெங்காயத்தின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையில், தமிழகத்தில் மிக அதிக அளவில் சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்யும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சரியான விலை கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர். கரும்பு, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திருப்பது போல, சின்ன வெங்காயத்துக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் 12 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் மட்டும் 22ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. திருச்சி மாவட்டம் இரண்டாவது இடத்திலும், திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தின் மண் வளம், தட்பவெப்பநிலை ஆகியவை இந்த பயிருக்கு மிகவும் சாதகமாக உள்ளதால் மிக அதிக எண்ணிக்கையில் இம்மாவட்ட விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.

சின்ன வெங்காயம் 70 நாள் பயிர் என்பதால் நவீன முறைகளை பின்பற்றி ஆண்டுக்கு நான்கு முறைகூட சிலர் இம்மாவட்டத்தில் வெங்காயம் பயிரிடுகின்றனர். ஆனால், உரிய விலை கிடைக்காததாலும், சேமித்து வைக்க இடமில்லாததால் எடை குறைந்துவிடும் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பதாலும் லாபம் என்பதையே பார்க்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கும் சின்ன வெங்காய விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, முன்னோடி விவசாயி மணி ‘தி ஹிந்து’ நாளிதழுக்குக் கூறியதாவது:

“ஆடிப் பட்டத்துக்கு முந்தைய பருவ அறுவடை இப்போது முடிந்துள்ளது. வெங்காயத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் சோகத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். சராசரியாக ஒரு கிலோ ரூ.9-க்கு விலை போகிறது. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.45 ஆயிரம் செலவாகும். 5 டன் மகசூல் கிடைக்கும். கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.15 கிடைத்தால் ஓரளவு விலை கட்டுப்படியாகும். இப்போது வியாபாரிகள் பேசி வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலைக்கு கேட்கின்றனர். போதிய விலை கிடைக்காமல் போனதால் பயிரிட்ட வெங்காயத்தை பார்க்கும்போதே எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது.

ஆகவே, நெல் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிப்பது போல அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, சின்ன வெங்காயத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும்,மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாலர் ஆர்.ராஜா சிதம்பரம், “வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் பாரம்பரிய முறையிலான பட்டறைகளை அமைத்து அதில் வெங்காயத்தை சேமித்து வைக்கின்றனர். விலை மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது சேமித்துவைத்து சில மாதங்கள் கழித்து விலை அதிகமாக கிடைக்கும்போது விற்பதற்காக இப்படி செய்கின்றனர். இந்த பட்டறைகளில் 3 அல்லது 4 மாதங்கள் வரை மட்டுமே வெங்காயத்தை சேமித்து வைக்க முடியும். அதற்குமேல் சேமித்துவைத்தால் வெங்காயம் கெட்டுப் போய்விடும்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 10 செப் 2016