மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஏப் 2017

மாணவனை அடித்த ஆசிரியர் கைது!

மாணவனை அடித்த ஆசிரியர் கைது!

தற்போது ஆசிரியர் மாணவர்களைத் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை உடல் நலக்குறைவு ஏற்படும்வகையில் அடித்த ஆசிரியர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஜாய்சன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் புதன்கிழமை வகுப்புக்கு காலதாமதமாக வந்துள்ளார். அதனால் ஆசிரியர் ஜாய்சன், அம் மாணவனை வகுப்புக்கு வெளியே நிற்கவைத்து பல கேள்விகளைக் கேட்டுள்ளார். மேலும் காலதாமதத்துக்கான காரணத்தை எழுதுமாறு கேட்டுள்ளார். பின்னர், அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரிடம் அடி வாங்கிய நிலையில், வீட்டுக்குச் சென்ற மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் மாணவனை காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும் மாணவன் பள்ளியில் அதிகளவில் சேட்டை செய்பவன் என பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 7 ஏப் 2017