மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

1908ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த இயக்குநர் Jacqus Tati சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம்மிக்கவராக இருந்தார். ரக்பி, டென்னிஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர். உடைமாற்றும் அறைகளில் சக வீரர்களைப் போல நகைச்சுவையாக நடித்துக்காட்டுவதில் தொடங்கியது இவரது கலை ஆர்வம். நடிப்பு மீதான ஆர்வத்தில் நாடகத்திலும் இசை அரங்கத்திலும் தோன்றினார். குறும்படங்களில் நடித்தார். 1949இல் தனது முதல் படத்தை இயக்கிய இவர், சார்லி சாப்ளினோடு ஒப்பிடும் அளவுக்கு பிரான்ஸில் முக்கியமான இயக்குநர். நகைச்சுவையை இவர் பின்வருமாறு விளக்குகிறார்.

அபத்தத்தில் இருந்தே நகைச்சுவை பிறக்கிறது. மேலோட்டமாக பார்க்கையில் ஒரு விஷயத்தில் நகைச்சுவை இருப்பதில்லை. ஆனால், அந்த விஷயத்தை குறுக்காக வெட்டிப் பார்க்கும்போது அது நகைச்சுவையாக மாறிவிடுகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது