மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஒரு கி.மீ. நீளத்தில் பிரதமருக்குக் கடிதம்!

ஒரு கி.மீ. நீளத்தில் பிரதமருக்குக் கடிதம்!

ஒரு கி.மீ. நீளத்தில் பிரதமர் மோடிக்கு, உத்தரப்பிரதேச மாநிலப் பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், எல்லையில் நடக்கும் அத்துமீறல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

மே, 1ஆம் தேதியன்று ஜம்மு - காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடருகேவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

இந்திய எல்லைக்குள் சுமார் 200 மீட்டர் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், ராக்கெட்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் தாக்குதல் நடத்தினர். மேலும், வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் உடல் உறுப்புகளை துண்டித்து சிதைத்துள்ளனர். இச்சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஒரு கி.மீ. நீளம் கொண்ட கடிதத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர்.

எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கடிதத்தை, பிரதமர் மோடிக்கு மாணவர்கள் விரைவில் அனுப்பவுள்ளனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon