மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இந்தியாவில் சாம்சங்கை வீழ்த்தும் சீன நிறுவனங்கள்!

இந்தியாவில் சாம்சங்கை வீழ்த்தும் சீன நிறுவனங்கள்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சந்தையை ஆக்கிரமிக்க சீன நிறுவனங்களான ஆப்போ மற்றும் விவோ சுமார் ரூ.2,200 கோடி முதலீடு செய்கின்றன.

சர்வதேச நாடுகளுக்கு ஈடாக இந்தியாவும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் சுமார் 78 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் நீண்டகாலமாகவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்துள்ளது. சாம்சங்கை வீழ்த்துவதற்கு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும் தொடர்ந்து முயன்று வருகிறது. எனினும் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கியும், குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்பனை செய்தும் சாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது, இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பத்தாவது சீசனை தங்களது வளர்ச்சிக்கான ஆயுதமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளன. சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்போ மற்றும் விவோ ஆகியவை ஐ.பி.எல். விளம்பரங்களுக்கு அதிக செலவிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இவ்விரண்டு நிறுவனங்களும் ரூ.2,200 கோடி முதலீடு செய்கின்றன. சாம்சங், எல்.ஜி., வீடியோகான், சோனி ஆகிய நிறுவனங்களைவிட அதிகளவில் விளம்பரங்களுக்காக ஆப்போ மற்றும் லாவா நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன்மூலம் சாம்சங்கை வீழ்த்தி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இவ்விரு நிறுவனங்களும் மிகத் தீவிரமாக உள்ளன.

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon