மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

வில்லனாக அறிமுகமாகும் திரைப்படத் தயாரிப்பாளர்!

வில்லனாக அறிமுகமாகும்  திரைப்படத் தயாரிப்பாளர்!

‘பலே வெள்ளையத் தேவா’ படத்தை அடுத்து சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொடிவீரன்’. இந்தத் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார். தொடர் சர்ச்சைகளுக்கிடையே தனது படங்களை வெளியிடும் இயக்குநர் முத்தையாவுக்கு இது நான்காவது திரைப்படம். ‘குட்டிபுலி’ படத்துக்குப் பின் சசிகுமாரை வைத்து இயக்கும் திரைப்படம் ’கொடிவீரன்’. இந்தப் படத்தில் கதாநாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் ஹன்சிகா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்தப் படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்க இருந்தார். ஆனால், தற்போது அர்ஜுன் ஹீரோவாக நடித்து வருவதால், இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தார். இதனையடுத்து வில்லனாக நடிக்க அர்ஜுன் மறுத்துவிட்டார். தற்போது 'ஈரம்' அறிவழகன் இயக்கிய ‘குற்றம் 23' படத்தைத் தயாரித்த இந்தர்குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு மே 10ஆம் தேதி முதல் மதுரையில் தொடங்குகிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon