மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இன்ஃபோசிஸ் : அமெரிக்காவில் புதிய தொழில்நுட்ப மையங்கள்!

இன்ஃபோசிஸ் : அமெரிக்காவில் புதிய தொழில்நுட்ப மையங்கள்!

அமெரிக்க அரசு சமீபத்தில் விசாக் கொள்கையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை நியமிப்பதில் அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடும் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் புதிதாக நான்கு தொழில் நுட்ப மையங்களை அமைத்து அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. இப்புதிய நான்கு தொழில்நுட்ப மையங்களையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விசால் சிக்கா கூறுகையில், ”இண்டியானாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக நான்கு தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் மூன்று மையங்களுக்கான இடம் தேர்வு செய்யப்படும். இதன்மூலம் வரும் 2021ஆம் ஆண்டுகளுக்குள் அமெரிக்கர்களுக்குப் புதிதாக 2000 வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் மொத்தமாக 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டும் 60 சதவிகிதம் வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon