மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இன்றைய ஸ்பெஷல்: மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட்

இன்றைய ஸ்பெஷல்: மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட்

தேவையான பொருள்கள்:

நறுக்கிய அன்னாசி - ½ கப்

ஆரஞ்சு - 1

பேரிக்காய் - 1

அக்ரூட் பருப்புகள் - கால் கப் (மசித்தது)

லோல்லோ ரோஸ்ஸோ கீரை இலைகள் - 4

தேன் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை தோல் துருவல் - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 1

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு - சுவைக்குத் தகுந்த படி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சிவப்பு மிளகாயை நீளவாக்கில் நடுவாக வெட்டி அதில் உள்ள மிளகாய் விதைகளை நீக்கி, மிளகாயின் காரத்தை குறைக்க வேண்டும். மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு கிண்ணத்துக்கு மாற்ற வேண்டும். அதன் பின்னர் அதில் தேன், எலுமிச்சை தோல் துருவலைச் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும்.

ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் அக்ரூட் பருப்புகளைப் போட்டு நன்கு சூடாக்க வேண்டும். பருப்புகள் நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும். அன்னாசி, பேரிக்காய், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகிய அனைத்து பழங்களையும் உங்கள் விருப்பப்படி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் எடுத்து அதன் மீது ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

ஒரு பரிமாறும் தட்டை எடுத்து அதில் கீரையை விரித்து அதன் மீது பழங்களைப் பரப்பி, இறுதியாக சில வறுக்கப்பட்ட அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை வைத்து அழகுபடுத்த வேண்டும். இப்போது சுவை மிகுந்த தேன் மற்றும் மிளகாய் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட் பரிமாறத் தயாராகிவிடும்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon