மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

கிரகணம் – டீனேஜ்களின் ட்ரெண்டிங் ஆல்பம்!

கிரகணம் – டீனேஜ்களின் ட்ரெண்டிங் ஆல்பம்!

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கிரகணம்’ திரைப்படம் டீனேஜ்களின் பிளே லிஸ்ட்டில் ஒரே நாளில் இடம்பிடித்துவிட்டது. யுவனின் ஆடியோ நிறுவனமான யுவன் ரெகார்ட்ஸ் வெளியிட்ட ‘கிரகணம்’ திரைப்படத்தின் பாடல்களை இசையமைத்திருப்பவர், சமீபத்தில் வெற்றி பெற்ற ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி.

கிரகணம் டீசர் பார்த்ததிலிருந்தே இவங்க ஏதோ செஞ்சுருக்காங்க எனக் காத்திருந்தவர்களுக்கு, நேற்று (03.05.17) வெளியான ‘கிரகணம்’ படப்பாடல்கள் நிறைய செஞ்சுருக்கோம் என முழு எனர்ஜியுடன் காதில் சொல்லியிருக்கிறது.

‘கிரகணம்’ படத்தின் ஹீரோயின் நந்தினி, ‘இந்தப்படத்தில் நான் ஒருத்தியே பல மாதிரியாக நடித்திருப்பேன்’ என்றபோது, வழக்கமான ஹீரோயின் டயலாக் என ஓரம்தள்ளியவர்கள் பலர், இப்போது அந்தப்பேட்டியை தூசி தட்டிக்கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை பாடல்கள் பெண் குரலிலேயே அமைந்திருக்கிறது.

‘யார் என்று கேட்க மனதில்லையே’ பாடலைப் பாடியிருக்கும் பத்மபிரியா, Dont Funk Me Up பாடலைப் பாடியிருக்கும் நிவேதிதா கிரி, ‘சீட்டு கட்டு ராணி’யைப் பாடியிருக்கும் ஜனனி, Take It Ease Foxy பாடலைப் பாடியிருக்கும் சரண்யா கோபிநாத், Super Model பாடலைப் பாடியிருக்கும் லேடி காஷ் என ஏழு பாடல்களில் ஐந்து பாடல்களை பெண்களைப் பாட வைத்திருக்கிறார்கள். ஐந்தும் ஐந்து ரகமாக இருக்கின்றன.

‘யார் என்று கேட்க மனதில்லையே’ பாடலை உருக்கமாகப் பாடியிருக்கும் பத்மபிரியா, மெலடி பிளேலிஸ்டுக்கு ஒரு பாடலைக் கொடுத்திருக்கிறார். Dont Funk Me Up பாடல் Rap லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறது. சீட்டு கட்டு ராணி குத்துப்பாடல் லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறது. Take it easy Foxy மற்றும் Super Model வெஸ்டர்ன் ஸ்டைலில் அதிர வைக்கின்றன. மற்ற இரண்டு பாடல்களில் ‘முனிம்மா’ பாடலை, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி பாடியிருக்கிறார். Blood Moon பாடலை தேஜஸ்வின் மற்றும் ஜே.பி. பாடியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில், ‘கிரகணம்’ ஆல்பம் பல காலத்துக்குப் பிறகு முழு ஆல்பமாக ஹிட் அடித்திருக்கிறது.

கிரகணம் JukeBox

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon