மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

கெடுபிடி வேண்டாம்: ஹெல்மெட் குறித்து நாராயணசாமி!

கெடுபிடி வேண்டாம்: ஹெல்மெட் குறித்து நாராயணசாமி!

‘ஹெல்மெட் அணியாதவர்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம். ஹெல்மெட் அணிவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், ஹெல்மெட் அணிவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர். வெறும் 20 கிலோமீட்டர் வேகம் கூட செல்ல முடியாத சாலைக்குள் ஹெல்மெட் அணிய வேண்டுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்குக் கிளம்பிய தொடர்ச்சியான எதிர்ப்பினால் நேற்று (3.5.2017) சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜஹான், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்களிடம் அதிகமாகக் கெடுபிடி செய்யக்கூடாது என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அந்தக் குழு தாக்கல் செய்யும் அறிக்கை முடிவுகளை அடுத்து ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமா என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon