மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இன்டர்நெட்: நகரங்களை மிஞ்சும் கிராமங்கள்!

இன்டர்நெட்: நகரங்களை மிஞ்சும் கிராமங்கள்!

மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டில் நகர்ப்புற மக்களைவிட கிராமப்புற மக்கள் அதிகம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

‘இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் - 2016’ என்ற பெயரில் இந்திய மொபைல் கூட்டமைப்பும், ஐ.எம்.ஆர்.பி. நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ‘இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2015 அக்டோபர் மாதம் முதல் 2016 அக்டோபர் மாதம் வரையில் 15 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், நகர்ப்புற மக்களின் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு வெறும் 9 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

நடப்பு 2017-18 நிதியாண்டின் ஜுன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 42 கோடியாக உயரும். கடந்த 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதக் கணக்கீட்டின்படி, மொபைல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 38.90 கோடியாக இருந்தது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட் இணைப்புக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon