மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ட்ரெண்ட்டில் ‘பாகுபலி’ சேலைகள்!

ட்ரெண்ட்டில் ‘பாகுபலி’ சேலைகள்!

எங்கு பார்த்தாலும் எதில் பார்த்தாலும் பாகுபலி... பாகுபலி! கடந்த ஒரு வாரமாக இந்தியா முழுவதும் பாகுபலி ஜுரம். மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் பேசப்படும் ஒரே வார்த்தை ‘பாகுபலி’. அந்த அளவுக்கு பாகுபலி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

படம் வெளியாக ஒரு வாரத்துக்கு முன்பே அடுத்த ஒரு வாரத்துக்கு அனைத்துத் திரையரங்கங்களிலும் ஹவுஸ்ஃபுல். படத்தின் டிக்கெட் வாங்குவதற்கு மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் நிற்பது... திரைத்துறை ஜாம்பவான்களே தங்களது வலைதளத்தில் பிரமிப்பான வாழ்த்துகள் என இந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்கள் முழுக்கவே பாகுபலி பற்றிய பேச்சுதான்!

மேலும் ஒரு சில பிரபலங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும்போது அவர்களின் படங்களை மையமாகக் கொண்டு பல்வேறு விதமாக விளம்பரங்களும் வெளியாகின்றன. அந்த வகையில் ‘சக்திமான்’தொடர் துவங்கி ‘பாகுபலி’திரைப்படம் வரை தொடர்கிறது. பிஸ்கட் பாக்கெட்டுகளில் அந்தப் படங்களின் புகைப்படங்களை அச்சிடுவது... அதே போல் குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில், பேனாக்கள், ஜாமென்டரி பாக்ஸ் போன்ற பொருள்களிலும் அச்சிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதைப் போல் குழந்தைகளைக் கவர்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்துக்கு உடைகளைப் புதிதாக அறிமுகப்படுத்தி அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். ஒரு சில திரைப்படங்கள் வரும்போது அந்தப் படத்தின் பெயரைச் சொல்லி உடைகள் வாங்குவதைப் பலமுறை நாம் கண்டிருப்போம். இவைகளுக்கெல்லாம் மாற்றாகத் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி – 2’ திரைப்படத்தைக் காண வந்த பெண்கள், அந்தப் படத்தின் போஸ்டர்கள் அச்சிட்டச் சேலையைக் கட்டி வந்து அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon