மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பாண்டியனின் காதலி வந்தார்... வென்றார்!

பாண்டியனின் காதலி வந்தார்... வென்றார்!

நடிகை ரேவதி போன்ற நடிகைகளை ரசித்த சினிமா எப்படிப்பட்டதாக இருக்கும்? அது ‘அவதாரம்’ திரைப்படத்தில் ரேவதி தொட்டுப்பார்த்து உணர்ந்த வண்ணங்களைப் போல இருந்திருக்க வேண்டும். ஒரு கலைஞனின் திறமைக்காக மட்டுமே அவர் போற்றப்படும்போதுதான் சினிமா வளர்வதாக அர்த்தம். இதோ இத்தனைக் காலம் கடந்த பிறகும் ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் ராஜ்கிரணின் காதலியாக வந்தார் ரேவதி. ரசிகர்களின் மனதை வென்றார். தனுஷ், பிரசன்னா, மடோனா, சாயா சிங் என அனைவரையும் தாண்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட அந்த ‘பொன்னம்மா’ ரேவதிக்கு சினிமாவிலும் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. வெளிச்சம் என்றால் இத்தனை நாள்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதல்ல. அவர் படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறார் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது ‘பவர் பாண்டி’ திரைப்படம். அதுவரையில் அவர்களது நண்பர்கள் சிலருக்கு மட்டும் நல்ல கதையிருந்தால் ரேவதி நடிப்பார் என்பது தெரிந்திருந்தது. அப்படிக் கேள்விப்பட்டு சென்றவர்களும் ரேவதியை இம்ப்ரெஸ் செய்யும் அளவுக்கு கதையைக் கொடுக்கவில்லை. எனவே, ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் மூலம் ரேவதி படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அவரிடம் சென்று நின்றவர் பிரபுதேவா.

புதுமுக இயக்குநர் கர்ணன் இயக்கும் ‘குலேபகாவலி’ திரைப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். காமெடி ரோலுக்காக சத்யன் நடிக்கிறார். இவர்கள் மூவருமே பொழுதுபோக்குக்காக இருந்தாலும், மிக முக்கியமான கேரக்டரில் ரேவதியை நடிக்க வைத்திருக்கிறார்கள். பிரபுதேவா தேடிச்செல்லும் ஒரு புதையலைப் பற்றிய தகவல்கள் தெரிந்த பேராசிரியராகப் படத்தில் ரேவதி நடிப்பதாகத் தெரிகிறது.

குலேபகாவலி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon