மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

கேரளா: மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

கேரளா: மதம் பிடித்த யானையால் பாகன் பலி!

நமது அண்டை மாநிலமான கேரளாவில், பாலக்காடு அருகில் உள்ள ஊர், ஆலத்தூர். இங்கு நடக்கும் கோயில் திருவிழாவில் யானைகளையும் அலங்கரித்து அழைத்து வருவர். அப்படி யானைகள் வந்துகொண்டிருக்கும் போது, திடீரென ஒரு யானைக்கு மதம் பிடித்தது. தெருக்களில் ஓடிய அந்த யானையைப் பாகன் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், முடியாததால் இறங்கிவிட்டார். ஆனால், யானையோ அருகில் இருந்த கல்லை எடுத்து பாகனின் மேல் வீசியது. இதில் பாகனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக அவரது உயிர் பிரிந்தது.

கேரளாவில் சமீபத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் திருவனந்தபுரம், பரசாலா, பாலக்காடு ஆகிய பகுதிகளில் நடந்த திருவிழாக்களில் யானைக்கு மதம்பிடித்து தாக்கியதில் மூன்று பாகன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon