மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

ஜனவரியில் தொடங்கும் நிதியாண்டு!

ஜனவரியில் தொடங்கும் நிதியாண்டு!

இந்தியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நிதியாண்டாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான உலக நாடுகளில் ஜனவரி 1ஆம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலேயே ஒரு நிதியாண்டாக கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டிலேயே முதன்முதலாக மத்தியப்பிரதேச மாநிலம் தனது நிதியாண்டு வடிவத்தை மாற்றுகிறது. இதன்படி வரும் 2018ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒரு நிதியாண்டாக அறிவித்து அமல்படுத்துகிறது. மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிவ் சவுகான் தலைமையில் கடந்த 02.05.2017 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்த நிதியாண்டு வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை கணக்கிடப்படவுள்ளது. கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை மாற்றுவது குறித்து முதலமைச்சர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியபின் மத்தியப்பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘நிதியாண்டு காலத்தை மாற்றுவதன் மூலம் விவசாயத் துறையின் வருவாயை அதிகரிக்க முடியும். எனவே நிதியாண்டை மாற்ற உடனடியாக முயற்சிக்க வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon