மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

தொடரும் சின்னத்திரை தற்கொலைகள்!

தொடரும் சின்னத்திரை தற்கொலைகள்!

சமீபத்தில் சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. நடிகர் சாய் பிரசாந்த், நடிகை சபர்ணா ஆகியோர் கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. போலீஸார் இந்த தற்கொலைகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள். சின்னத்திரை நடிகை 'மைனா' நந்தினியின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுமங்கலி தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப். இவர் ஐதராபாத்தில் உள்ள பப்புல்லாகுடா பகுதியில் வசித்து வந்தார். இவர் நேற்று (3/5/2017) அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனே தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்ட பிரதீப், சமீபத்தில் டி.வி. நடிகை பவானி ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டார். இவரது தற்கொலை திரையுலகினர், சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதீப் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அவரது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் தனது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இதுகுறித்த உண்மை நிலவரங்கள் இன்னும் தெரியவில்லை.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon