மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

சயனை விசாரிக்க அனுமதிக்காதது ஏன்? மருத்துவமனை விளக்கம்!

சயனை விசாரிக்க அனுமதிக்காதது ஏன்? மருத்துவமனை விளக்கம்!

‘கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சயனை விசாரிக்க மறுத்தது ஏன்?’ என்பதற்கு மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சயன் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சயனைச் சந்தித்து விசாரிக்க வந்த கேரள மாநில போலீஸாருக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துள்ளது.

கடந்த 29ஆம் தேதி சயன் வந்த கார் விபத்துக்குள்ளானதில் மனைவி வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த சயனுக்குக் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சயனைச் சந்திக்க வந்த கேரளா போலீஸாருக்குத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக நேற்று (3.5.2017) மாலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜன், “சயனின் உடல்நிலை நலமுடன் இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முறையான அனுமதியுடன் சயனைச் சந்திக்க வந்தால் கேரள போலீஸாருக்கு அனுமதி வழங்கப்படும். இருமுறை வந்தபோதும் கேரள போலீஸார் முறையான அனுமதி இல்லாமலும், உள்ளூர் காவல்துறை அனுமதி இல்லாமலும் சயனைச் சந்திக்க வந்ததால் அனுமதி வழங்கவில்லை. சயனுடன் உறவினர்கள் யாரும் இல்லை. எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். உயிருக்குப் போராடுவது யாராக இருந்தாலும் அவருக்குச் சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவ தர்மம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

புதன், 3 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon