மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைக்க முடியாது : எஃப்.பி.ஐ. தலைவர்

ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைக்க முடியாது : எஃப்.பி.ஐ. தலைவர்

அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எஃப்.பி.ஐ.-யும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். ஹிலாரியின் குற்றச்சாட்டை மறைத்திருந்தால் அது பேரழிவாக இருந்திருக்கும் என எஃப்.பி.ஐ. தலைவர் விளக்கம் தந்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிட்டனர். இதற்குமுன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி, அரசு இ-மெயிலை தனது தனிப்பட்ட வேலைக்காகப் பயன்படுத்திய பழைய குற்றச்சாட்டை தேர்தல் சமயத்தில் எஃப்.பி.ஐ. வெளியிட்டது. இதனால் ஹிலாரிக்கு அப்போது தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது.

தேர்தல் தோல்வியில் இருந்து 5 மாத இடைவெளிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹிலாரி மீண்டும் ‘அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்’. அப்போது பேசிய ஹிலாரி, ‘என் பிரச்சாரத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தன. இருந்தாலும் எஃப்.பி.ஐ.யின் அறிவிப்பு, விக்கி லீக்ஸ், ரஷ்ய தலையீடு ஆகியவை தடையாக இருந்தன’ என்று குற்றம் சாட்டினார்.

ஹிலாரியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த எஃப்.பி.ஐ. தலைவர்,ஜேம்ஸ் கொமே, ’அந்த நேரத்தில் ஹிலாரியின் மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது கடினமானதுதான். ஆனால் அது சரியான முடிவுதான். அதை மறைத்துவைத்திருந்தால் தற்போது பேரழிவுக்கு வழிவகுத்திருக்கும். இதனால் யாருடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என என்னால் அப்போது பரிசீலிக்க முடியவில்லை’ எனத் தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon