மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பஜாஜை வீழ்த்திய ஹோண்டா!

பஜாஜை வீழ்த்திய ஹோண்டா!

இந்திய மோட்டார் சைக்கிள் வாகனச் சந்தையில் இரண்டாம் இடத்திலிருந்த பஜாஜ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் குர்கான் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனமும், புனேவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இருசக்கர வாகனச் சந்தியில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருப்பதோடு, தங்களுக்குள் கடும் போட்டியிட்டு வருகின்றன. எனினும் இச்சந்தையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறது. பஜாஜ் நிறுவனம் இரண்டாமிடத்திலும், ஹோண்டா நிறுவனம் மூன்றாமிடத்திலும் இருந்து வந்தன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 22 சதவிகித உயர்வுடன் 1,83,266 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. அதேநேரம், பஜாஜ் நிறுவன வாகன விற்பனை 19 சதவிகிதம் சரிவடைந்து வெறும் 1,61,930 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக (மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்) 34 சதவிகித உயர்வுடன் 5,78,929 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ நிறுவன வாகன விற்பனையைவிட எண்ணிக்கையில் 12,377 மட்டுமே குறைவாகும்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon