மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தாடி ரகசியம்!

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தாடி ரகசியம்!

கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹைசி இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிரகணம்’. இளன் இயக்கியுள்ளார். கிருஷ்ணா, கயல் சந்திரன், நந்தினி, கருணாஸ், ஜெயப்பிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின் உட்பட பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் பற்றி ஹீரோ கிருஷ்ணா பேசும்போது, தனது அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தாடிவைத்த ரகசியத்தைச் சொன்னார். அவர் கூறும்போது, ’அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்புத் தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22. சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்புத் தர முன்வரவில்லை. அதனால்தான் என் தந்தை பட்டியல் சேகர் தயாரிப்பாளர் ஆனார். அதன்பிறகு, பெரிய ஆள் போல் தோற்றம் வேண்டும் என்பதற்காக தாடி வைத்துக்கொண்டார். அந்த தாடியை இன்று வரை விஷ்ணுவர்தன் மெயின்டெய்ன் பண்ணி வருகிறார்’ என்றார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon