மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

அக்னி ஏவுகணை சோதனை!

அக்னி ஏவுகணை சோதனை!

அக்னி-II ஏவுகணை வெற்றிகரமாக மே 4-ஆம் தேதி காலை 10.22 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. ஒடிஸா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ள பட்டது. இந்த அப்துல் கலாம் தீவு இதற்கு முன் வீலர்ஸ் தீவு என அழைக்கப்பட்டது.

இந்த அக்னி ஏவுகணை 2000 கிலோமீட்டர் வரை முழுமையாக சென்று தாக்கக்கூடிய சக்தி கொண்டது. 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 17 டன் எடை கொண்டது. மேலும் 1000 கிலோ கூடுதல் எடையை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு அமைப்பால் தயாரிக்கப்படும் இந்த அக்னி ஏவுகணைகள் இந்தியாவின் அண்டை நாடுகளின் அணு ஆயுத தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்படுகின்றன.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon