மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

1,498 ரூபாயில் விமான டிக்கெட் : ஏர் ஏசியா இந்தியா

1,498 ரூபாயில் விமான டிக்கெட் : ஏர் ஏசியா இந்தியா

விடுமுறை தின விற்பனைச் சலுகையாக 1,498 ரூபாய்க்கு விமான டிக்கெட் வழங்கும் சிறப்பு சலுகைத் திட்டத்தை ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வழங்கிவரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், Holidays Sale என்ற பெயரில் விடுமுறை தினச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, கவுகாத்தி - இம்பால் வழித்தடத்தில் 1,498 ரூபாய் சலுகை விலை கட்டணத்தில் பயணம் செய்யலாம். இதற்கான டிக்கெட்டுகளை வருகிற மே மாதம் 14ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம் என்றும், அக்டோபர் 1ஆம் தேதி வரை இச்சலுகைத் திட்டத்தில் பயணம் செய்யலாம் என்றும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதவிர, ராஞ்சி - கொல்கத்தா வழித்தடத்தில் ரூ.1,699, கோவா - பெங்களூரு ரூ.1,719, ஹைதராபாத் - பெங்களூரு ரூ.1,799 மற்றும் ஹைதராபாத் - கோவா ரூ.1,999 என்று விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெல்லி -ஸ்ரீநகர், டெல்லி - பாக்தோகிரா மற்றும் டெல்லி - புனே ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் விமான சேவையைத் தொடங்கிய ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் அதிவிரைவில் டெல்லி - கோவா வழித்தடத்திலும் சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம், கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 8.4 லட்சம் பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளது. முந்தைய 2016ஆம் ஆண்டில் இந்நிறுவன விமானங்களில் பயணித்த 5.38 லட்சம் பயணிகளைவிட இது 5.38 சதவிகிதம் கூடுதலாகும்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon