மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ஹாக்கி : ஹாட்ரிக் கோலால் ஜப்பானை வென்ற இந்தியா!

ஹாக்கி :  ஹாட்ரிக் கோலால் ஜப்பானை வென்ற இந்தியா!

மலேசியாவில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 3-0 என வெற்றி பெற்றது. 3 வது லீக்கில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்த இந்தியா நேற்று நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் முதல் கோலினை இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் அடித்தார். பின்னர் 13-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் குஷாமா முராடா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

பின்னர் இரண்டாவது பாதி தொடங்கிய 43-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹெய்டா யோஷிகரா ஒரு கோல் அடித்தார். இதனால் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, அடுத்த 2-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் சிங் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற கணக்கில் மீண்டும் சமநிலைக்கு வந்தது. அடுத்த சில நொடிகளில் ஜப்பான் வீரர் ஜென்கி மிடானி பெனால்டி மூலம் ஒரு அடிக்க, அந்த அணி மீண்டும் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் அதிரடியான ஆட்டத்தால் மந்தீப் சிங் 51 மற்றும் 58-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார். இறுதியில் மந்தீப் சிங்கின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon