மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

செல்போன் பறிமுதல் வழக்கு : கோர்ட்டில் முருகன் ஆஜர்!

செல்போன் பறிமுதல் வழக்கு : கோர்ட்டில் முருகன் ஆஜர்!

சிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி சிறையில் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில், சோதனை மேற்கொண்ட போலீசார் இரண்டு செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 3 மாதங்கள் சிறையில் முருகன் யாருடனும் பேசக் கூடாது என்று சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு, வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மே 4ஆம் தேதி (இன்று) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon