மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

உற்பத்தித் துறையில் அதிக கவனம் தேவை!

உற்பத்தித் துறையில் அதிக கவனம் தேவை!

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உற்பத்தித் துறையில் இந்தியா அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்று, நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உற்பத்தித் துறையிலும் சேவைகள் துறையிலும் இந்தியா கவனம் செலுத்திட வேண்டும். ஏனெனில், இத்துறைகளில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. ரோபோக்களை தயாரிப்பதால் வேலைவாய்ப்பு குறையும் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில், இன்னும் 20 வருடங்களுக்கு ரோபோக்கள் அல்லது தானியங்கிமயத்தால் வேலைவாய்ப்பில் எவ்விதத் தாக்கமும் ஏற்படாது.

இந்தியா போன்ற மிகப்பெரிய பொருளாதார நாட்டில் முறைசாரா துறை மிக முக்கியமானது. இத்துறையில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த வேண்டும். அது கடினமான ஒன்றுதான் என்றாலும் அதை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச சேவைகள் துறையில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இத்துறைக்கான வர்த்தகத்தை நாம் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வரும் காலங்களில் இத்துறையில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்று கூறினார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon