மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

கெளதம் மேனன் படத்தில் சுனைனா!

கெளதம் மேனன் படத்தில் சுனைனா!

கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மறு வார்த்தை பேசாதே’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடல் 'நான் பிழைப்பேனா' மேக்கிங் வீடியோ மற்றும் பாடல் வரிகளுடன் வெளியானது. இளமை ததும்பும் கௌதம் மேனன், தாமரை கூட்டணி என்பதால் இளைஞர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் கலந்த திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஒன்ராகா எண்டர்டெயின்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திலிருந்து, மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ என, இரு பாடல்களை வெளியிட்டுள்ள கெளதம் மேனன், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதைத் தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். படத்தின் டீசரை வெளியிடும்போதும் இசையமைப்பாளர் யார்? என்பதைத் தெரிவிக்காமல் மிஸ்டர்.எக்ஸ் (Mr.X) என்றே குறிப்பிட்டிருந்தார். எனினும் படத்துக்கு தர்புகி சிவா அல்லது லியோன் ஜேம்ஸ்தான் இசையமைத்திருப்பார்கள் என்று இணையதளத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், `எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகை குறித்த தகவலையும் கெளதம் மேனன் சஸ்பென்ஸாகவே வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அது வேறு யாருமல்ல, நடிகை சுனைனாதான். சுனைனா, இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் தவிர சுனைனா, சமுத்திரக்கனி இயக்கத்தில் `தொண்டன்' படம், தெலுங்கில் `பெல்லிக்கி முண்டு பிரேமக் கதா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் வெளிவந்தால் இழந்த தனது பழைய மார்க்கெட்டைப் பிடிக்கலாம் என கணக்குப் போட்டு வருகிறாராம்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon