மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி : மத்திய அமைச்சர்!

அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி : மத்திய அமைச்சர்!

வரும் 2018ஆம் ஆண்டு, மே மாதத்துக்குள் மின்சாரம் இல்லாத கிராமங்களே இருக்காது என்று, மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 3ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், '2018ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்குள் மின்சாரம் இல்லாத 18,452 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்போம் என்பது மோடியின் வாக்குறுதி, தற்போதைய நிலவரப்படி, 13,377 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருடத்துக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்களே இருக்காது என்ற நிலை வரும். கிராமத்தின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்தபின், மலிவு விலை மின்சாரம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதிலும் முக்கியமாக தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon