மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வருமான வரித் தாக்கல் அதிகரிப்பு!

வருமான வரித் தாக்கல் அதிகரிப்பு!

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதற்குப்பின் வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கறுப்புப் பண ஒழிப்புநோக்கில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் புதிதாக 95 லட்சம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதிக்குப்பின் வருமான விவரங்களுக்குப் பொருந்தாமல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அதிகமாக டெபாசிட் செய்த 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் அந்தக் காலகட்டத்தில் அதிக விலைக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கியவர்களும் வருமான வரித்துறை சார்பில் கவனிக்கப்பட்டார்கள்.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைகளால் பலர் வருமான வரி செலுத்தியுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது மின்னணு தாக்கல் மூலம் மட்டும் 22 சதவிகிதம் கூடுதலாக வருமான வரி செலுத்தியுள்ளனர். இதன்மூலம் ரூ.5.28 கோடி ரூபாய் கூடுதலாக வருமான வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon