மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

மேக்சிமில் எமி - மேக்சிமம் தாராளம்!

மேக்சிமில் எமி - மேக்சிமம் தாராளம்!

எமி ஜாக்சன் தமிழில் நடித்த முதல் படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்தாலும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடிப்பதால் அவரது மார்க்கெட் எதிர்பார்க்காத அளவுக்கு எகிறியிருக்கிறது. எமியின் சம்பளமும் கோடியைத் தாண்டி உயர்ந்துவிட்டது. ஆனால் 2.0 படத்துக்குப் பிறகு எமிக்கு புதிய படங்கள் இன்னும் கமிட் ஆகவில்லை. விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், மேக்சிம் ஆங்கில இதழின் அட்டைப்படத்துக்கு தாராளமாக போஸ் கொடுத்திருக்கிறார் எமி. எமி ஜாக்சன் இதற்குமுன் பலமுறை மேக்சிம் இதழின் அட்டைப்படத்துக்கு மாடலாக இருந்திருக்கிறார். அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் பரவலாக பேசப்பட்டுள்ளது. மேக்சிம் ஆங்கில இதழைப் பொருத்தவரை, அட்டையில் யார் மாடலாக இடம் பெறுகிறார்களோ, அந்த நடிகையின் எக்ஸ்க்ளூசிவ் கவர்ச்சிப் படங்கள் புதிதாக எடுக்கப்பட்ட இதழின் உள்ளே பல பக்கங்களில் இடம்பெறும். இதற்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ஆனால் இவ்வளவு குறுகிய கால இடைவேளையில் அடிக்கடி இதழின் அட்டைப்படத்தை அலங்கரித்த ஒரே நடிகை எமி ஜாக்சன்தானாம். அதற்குக் காரணம் எமியின் படங்களை வெளியிடும்போது வழக்கமாக இருக்கும் இதழின் விற்பனை பலமடங்கு கூடுவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எமியையும் சும்மா சொல்லக் கூடாது. ரசிகர்களுக்கு எந்த வஞ்சனையும் செய்யாமல் தனது அழகை காட்டிக் கிறங்கடித்து வருகிறார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon