மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

குன்னூர்: தேயிலை விலை கடும் சரிவு!

குன்னூர்: தேயிலை விலை கடும் சரிவு!

குன்னூர் தேயிலை வர்த்தகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் முதன்முறையாக தேயிலையின் தோராய விலை 100 ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது என்று, தேயிலை உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வார ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.93.04 ரூபாயாகச் சரிந்தது. 2017ஆம் ஆண்டில் மிகக்குறைந்த விலை இதுவேயாகும்.

கடந்த ஆண்டு தீபாவளிக்குப்பின் அக்டோபர் மாதத்தின் இறுதியிலிருந்து தேயிலை விலை தொடர்ந்து தோராயமாக ரூ.100க்கு மேலேயே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து விலை தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே தேயிலை விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.5 விலை சரிந்தது. இந்த வார விற்பனையில் ரூ.8 விலை சரிந்துள்ளது. மொத்தமாக, கடந்த இரு வாரங்களில் மட்டும் ஒரு கிலோ தேயிலை விலை 13 ரூபாய் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ctc ரக தேயிலையைப் பொருத்தவரையில், தர்மோனா எஸ்டேட் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.200 என்ற அளவிலும், தாமஸ் & கோ தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.236 என்றளவிலும் அதிக விலைக்கு ஏலம் போனது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon