மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பாகுபலி 2 : பாதிக்கப்படும் திரைப்படங்கள்!

பாகுபலி 2 : பாதிக்கப்படும் திரைப்படங்கள்!

பாகுபலி 2 திரைப்படம், தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் கடந்த வாரம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. படம் திட்டமிட்டபடி அன்று வெளியாகுமா என்று பல சர்ச்சைகள் எழுந்தாலும் படம் காலை காட்சிக்கே வெளியானது. படத்தின் முதல் காட்சியிலிருந்தே படம் பற்றி ‘பாசிடிவ்’ஆன தகவல்கள், செய்திகள் பரவியதால் படம் தமிழ்நாட்டிலும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிறு வரை பல திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வரும் வெள்ளியன்று 5ஆம் தேதி வெளியாவதாக சொல்லப்பட்ட எய்தவன், தொண்டன், கொளஞ்சி, ஆகிய படங்கள் அதற்கடுத்த வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இருந்தாலும் வரும் 5ஆம் தேதி தன்ஷிகா முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ள ‘எங்க அம்மா ராணி’ மற்றும் ஆரம்பமே அட்டகாசம், மதிப்பெண், விளையாடவா ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகவுள்ளன.

அதற்கடுத்த ஒரு வாரத்துக்குள் பாகுபலி 2 ஜுரம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் மே 12ஆம் தேதியன்று உள்குத்து, சரவணன் இருக்க பயமேன், திறப்பு விழா ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறியப்படுகிறது. மேலும் இந்தப் படங்களோடு இந்த வாரம் வெளிவரவிருந்த படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்களுக்கு வரும் சோதனை இது முதன்முறையல்ல. இருந்தாலும் இது தொடர்கிறது. இதற்கான முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட படக் குழுவினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon