மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

நீதிபதி கர்ணன் செய்வது சரியா? : சட்ட வல்லுநர்கள் கருத்து!

நீதிபதி கர்ணன் செய்வது சரியா? : சட்ட வல்லுநர்கள் கருத்து!

நீதிபதி கர்ணனுக்கும் உச்சநீதிமன்ற நீதிபகளுக்கும் இடையே மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகளுக்குள் நடக்கும் இந்த யுத்தம் குறித்து சட்ட வல்லுநர்கள் விகடனுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்

கர்ணன் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. இதுதான் பிரச்சினை தொடங்கக் காரணமாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். அவரை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்கின்றனர். என்னைப் பொருத்தவரை வேலை நீக்கத்தைவிட இடமாற்றம் என்பது மிகவும் கொடுமையானது அந்த ஆதங்கத்தில் கடிதம் எழுதினார்.

நீதிபதிகள் குறித்து கர்ணன் புகார் கொடுத்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடுமா என்ன? தேவையில்லாமல் கர்ணனுடைய கடிதத்தைப் பெரிதாக்கி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தனர் அதற்கான அவசியமே இங்கு இல்லை அடுத்த மாதம் அவர் ஓய்வு பெற உள்ளார் அதனால் இந்த விவகாரத்தை அப்படியே விட்டிருக்கலாம். இது ஒரு விதமான ஈகோ மோதலாக தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்த மோதலை ஆரம்பித்து வைத்த உச்சநீதிமன்றத்துக்கு இதை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை.அதே நேரத்தில் இதனை எதிர்கொள்ளும் கர்ணனுக்கும் இதனை எவ்வாறு அணுக வேண்டும் என்று தெரியவில்லை தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய புகார் மனுவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. அதனால் இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தால் நீதிமன்றத்துக்குத்தான் பாதிப்பு அதிகம்

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு

கர்ணனுடைய நடவடிக்கை முற்றிலும் தவறானது. கர்ணன் மீது புகார் வந்தபோதே அதனை விசாரிக்க உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அந்த நடவடிக்கையை எடுக்கத் தவறியதே இப்போது இதுபோன்ற கேலிக்கூத்துகள் நடைபெறக் காரணம். லெட்டர் பேடை வைத்துக் கொண்டு நீதிபதிகள் மீது கண்டபடி அறிக்கை விடும் கர்ணனின் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை விரைவில் ஓய்வு பெற போகும் காரணத்தால்தான் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் கர்ணன் இவ்வாறு பேசி வருகிறாரோ என்று தோன்றுகிறது. இதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேலும் இறுக வாய்ப்பு அதிகரித்துவிட்டது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon