மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மின் திருட்டை தடுக்க ஆதார் இணைப்பு!

மின் திருட்டை தடுக்க ஆதார் இணைப்பு!

மே 4-ஆம் தேதி உ.பி தலைநகர் லக்னோவில் மின் கட்டணங்களுடன் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இணைக்கப்படும் என உ.பி அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் மின் திருட்டை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மின் திருட்டை கண்காணிக்க கூடுதலாக 75 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மின் திருட்டுக்கு புதிதாக தண்டனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மின் திருட்டில் ஈடுபட்டு முதல் முறையாக பிடிபடுபவர் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இரண்டாவது முறையாக சிக்குபவர் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போஸ்டுபெய்டு மின் மீட்டர்கள் போலவே பிரீபெய்டு மின் மீட்டர்களும் உ.பி மாநில வீடுகளில் பொருத்தப்படும். மேலும் சூரிய மின் சக்தியில் உ.பி அரசு கவனம் செலுத்த போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon