மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மதுக்கடைகளை மூடச்சொல்லும் 'திறப்பு விழா'!

இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றிய கே.ஜி.வீரமணி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.'திறப்பு விழா' படத்துக்கான படப்பிடிப்பு விருதாச்சலம், நெய்வேலி, கல்பாக்கம், சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகளும் மும்முரமாக நடந்து முடிவடைந்திருக்கிறது. இந்தப்படத்தை இம்மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறார்கள்.

இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாக நடிக்க, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் ரஹானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட் லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க நாயகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வசந்த ரமேஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை பூமிகா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரினா பேகம் தயாரித்துள்ளார்.

திறப்பு விழா படத்தின் டிரைலர்

{https://www.youtube.com/watch?v=LJ2kxmOPArE}

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon