மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

பன்னீரின் செயல் வீரர்கள் கூட்டம்!

 பன்னீரின் செயல் வீரர்கள் கூட்டம்!

சென்னை கொட்டிவாக்கம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மே மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 4 மணிக்கு அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் உள்ள தனது தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்த சுற்றுப்பயணத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை (நாளை) தொடங்கி இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் வாரியாகச் சென்று கூட்டம் நடத்தி தொண்டர்களைச் சந்திக்கிறார்.

இதையொட்டி, மே மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 4 மணிக்கு சென்னை கொட்டிவாக்கம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்துக்கு மைத்ரேயன் எம்.பி., தலைமை தாங்குகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலோசனை நடத்தி தொண்டர்களை சந்திக்கிறார். கழக ஆக்கப்பணிகள் குறித்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றியும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தக் கூட்டத்துக்காக ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தொண்டர்களை திரட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அனைத்து தொண்டர்களையும் சந்திக்க உள்ளார்.

வெள்ளி, 5 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon