மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

இது பசுமாடுகள் நடமாடும் பாதுகாப்புப் பகுதி - அப்டேட் குமாரு

இது பசுமாடுகள் நடமாடும் பாதுகாப்புப் பகுதி - அப்டேட் குமாரு

ஒரு பத்திரிகைக்காரனா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னா, கண்டிப்பா நல்லா இருக்காதுன்னு தெரிஞ்ச படமா இருந்தாலும் அதை பாத்துட்டுத்தான் நல்லா இல்லைன்னு எழுதணும். பாக்கமாட்டேன்னு சொன்னா, எல்.கே.ஜி. புள்ளைய ஸ்கூலுக்கு இழுத்துட்டு போய் விட்றாப்ல தரதரன்னு இழுத்துட்டு போய் தியேட்டர்ல விட்டுட்டு வர்றாங்க. ஆனா, ஹைதராபாத்ல ஒரு கம்பெனில பாகுபலி 2 படம் பாக்கலைன்னு ஒருத்தரை வேலையை விட்டு தூக்கிருக்காங்க. இதே அவர் பசு மாட்டை பாத்துக்கிட்டதால படம் பார்க்கலைன்னு சொல்லியிருந்தா மத்திய அரசாங்கம் கவர்மெண்ட் போஸ்ட்டே குடுத்துருக்கும். பட், அந்த எம்ப்ளாயிக்கு அவ்வளவா யோசிக்கத் தெரியல.

//ஆர்.மணிகண்டன்

ஆபிசுக்கு ஏன் இவ்வளவு லேட்டா வர்றீங்க?

வீட்டில சண்டை சார்..!

எங்கே..உடம்புல காயத்தை காட்டுங்க, அப்பத்தான்

நம்புவேன்…!//

//எஸ்.கோபு

மாணவர்களே, தங்கம் எங்கிருந்து கிடைக்குது?

மாமியார் வீட்டிலிருந்து சார்…!//

//Sara Sai Ramasamy

வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப்

போறா… போசாம நிக்கிறீங்களே?

திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன்.//

//மகேந்திரன் எஸ்.பி

அசைவம் சாப்பிடுபவன் இந்து இல்லை - எச்.ராஜா.

இப்படி பேசுபவன் மனித இனமே இல்லை.//

//Thippu Sulthan K

நாங்கல்லாம் ஆண்ட பரம்பர அவுரங்கசிப்பு வம்சம் ன்னு தெரியாம ஒருத்தரு காமெண்டுல துப்புராப்படி ...

ஓரளவுக்கு தா பொறுமை காக்க முடியும்..//

//ராஜா முகமது சீன தேசத்திலிருந்து

அரபுதேசத்து சாலையோர பேரித்த மரங்களினடியில், வானத்தை வெறித்தபடி எவரேனும் அமர்ந்திருந்தால், பைத்தியக்காரனென்று கடந்து விடாதீர்கள். அது ஒருவேளை நானாகவும் இருக்கக்கூடும்.//

//Kartik Raj P

நான் எந்த காரியம் பண்ணாலும் என் வீட்டுக்காரம்மாவோட சஜ்ஜசன் கேக்காம பண்ண மாட்டேன்..

அவ ஒரு காரியத்தை பண்ண வேணாம் னு சொன்னா.. நான் யோசிக்காம அந்த காரியத்தை உடனே தொடங்கிருவேன்..

அவ யோசிக்காம தொடங்கிடலாம் னு சொன்னா.. நான் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிச்சு தான் தொடங்குவேன்..

இப்ப அப்டிதான் ஒரு விஷயத்தை பண்ண வேணாம் னு சொன்னா.. அதை நாளைக்கே நான் தொடங்க போறேன்//

//Rubini Rubi

மைல்கற்களில் ஹிந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார் தான் தேவைப்படும் - எஸ்.வி.சேகர்

உன் மூஞ்சில பூசி விட கம்மியா தான் ஆவும்..😜ஆர் யூ ரெடி//

//Saba Sabastin Sabas

அசைவம் சாப்பிடுபவன் இந்துவே கிடையாது - எச்.ராஜா

கருப்பன் குசும்பேன்...எங்கயோ குஷ்க்கா அண்டாவ தூக்க முடிவு பண்ணிட்டாப்டி/

//Krishna Kumar

கலைஞர் அரசியலுக்கு வருவதருகே முன்பே கோடிஸ்வரர்தான்....துரைமுருகன்.

சும்மாவே ஓட்டுவாங்க நீங்க வேற பாயிண்ட் எடுத்து குடுக்குறீங்க குசும்புன்னே.//

//Dya Mithra

பாகுபலி #டவுன்லோட் பன்னுன அத்தனை பேரும் கைது செய்யப்படுவார்கள் -ஷால்.....!!!!

அது ஒன்னு இல்ல கத்திரி வெயிலோட தாக்கத்துல மூல இப்டி வேல செய்து...//

//வேணி மாரி

சினிமா டைரக்டரை கட்டிக்கிட்டது தப்பா போச்சா?

முதலிரவு அறையில், எல்லா விளக்குகளையும்

போட்டுட்டு ‘டேக்’ போலாமா’ங்கிறார்..!//

//நந்தகுமார் மாணிக்கம்

ஒரு நடிகனையும்,நடிகையையும் கண்டமேனிக்கு நாம் திட்டி பதிவு போடுவதால் இழப்பு அவர்களுக்கு இல்லை நமக்குத்தான்...அவங்க கோடியிலே அல்லது லட்சத்தில் சம்பளம் வாங்கிட்டு போயிட்டே இருப்பாங்க..இங்கே நெட்டிசன்கள் வந்து வடை சுடுவதால் நோ யூஸ்..

நேற்று வரை திரிஷான்னு சொன்ன அதே வாய்தான் இன்று அவளை பாட்டின்னு சொல்லுது.//

//Saba Sabastin Sabas

தலைவர் அரசியலுக்கு வருவதர்க்கு முன்பே கோடிஸ்வரர்தான்.. - துரைமுருகன்

அதனால தான் எம்ஜிஆர் கணக்கு கேட்டாரு//

//Ezhilan M

முதல்வர் அரசு கோப்பில் கையெழுத்து ஈடுவதையே சாதனையாய் சொல்லும் சோதனையான காலத்தில் வாழ்கிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?//

//K Vadivel Kuppusamy

ஆடிக்கு அடுத்து வரும் மாசமோ ஆவணி !!

அன்பே நீ உடுத்தி நான் ரசிக்க நினைக்கும் ஆடையோ தாவணி //

//Thippu Sulthan K

இவ்வளோ காலம் ஆகியும் இந்த பாவங்கள கழுவுறதுக்கு சோப்பு கண்டு புடிக்காம இருக்காங்கே..//

//Vijay Kuncharan

அழகிற்கெல்லாம் பெண்பால் பெயர்வைத்து ரசித்து எழுதிய ஆண்களே அழகினும் அழகானவர்கள்..!//

//SK Sendil

H.ராஜா...இருக்கும் வரை அமித்ஷா மட்டும் அல்ல அந்த ஆண்டவனே வந்தாலும்...

.தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 37×3.. தான்...//

//Sakthivel Kalaivanan

கீழே விழுந்தது பொம்பை

வலிக்கிறது குழந்தைக்கு....//

//Krishna Nashrik

ஒரு இட்லி க்கு ஒரு கரண்டி மாவு தான் ஊத்துறாங்க ஒரு தோசைக்கும் ஒரு கரண்டி மாவு தான் ஊத்துறாங்க ஆனா,

இட்லி 6 ரூபா தோசை 30 ரூபாய்க்கு விக்கிறாங்க....//

//Ashokumar Gurusamy

Baahubali 2 effect

ராஜ மாதாவாகவே இருந்தாலும் மாமியார் ஆகிவிட்டால் தவறு தான் செய்வார்.

பாகுபலியே ஆனாலும் மனைவியையும் அம்மாவையும் ஒரே நேரத்தில் சந்தோஷ படுத்த முடியாது.//

//Jai Kumar

கிட்டத்தட்ட ஒரு வருடம் பல சுவாரசிய செய்திகளை தந்துவிட்டு கடைசியில் வழக்கில் அடிப்படை முகாந்திரமில்லை என தள்ளுபடி செய்தது தனுஷ் வழக்கை;

கமல் மஹாபாரதம் குறித்து தவறாகப் பேசினார் என ஒரு வழக்கு; அந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து ஒரு வழக்கில் இடைக்கால தீர்ப்பு.

சீமைக்கருவேல மரத்தை வெட்டுன்னு ஒரு தீர்ப்பு, ஜாமீன் வேணும்னா கருவை மரங்களை வெட்டுன்னு ஒரு தீர்ப்பு, கருவை மரங்களை வெட்டுவதற்கு தடை போட்டு இன்னொரு தீர்ப்பு.

இப்படி பல அரசியல், சினிமாக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றுக்கும் உதவாத வழக்குகளை மெனக்கெட்டு விசாரித்து வருகிறது நம் நீதிமன்றங்கள்!

இப்படி ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லாத வழக்குகளை விசாரணைக்கு எடுத்து அதை பல வருடத்திற்கு இழுத்துக் கொண்டிருப்பது ஏன்?

மற்றொருபுறம் பொதுமக்களின் பல்வேறு அதிமுக்கிய வழக்குகளுக்கு வாய்தா வாய்தா என இழுக்கடித்து வருடக்கணக்காக தேங்கிக் கிடக்கின்றன லட்சோப இலட்சம் வழக்குகள்!

நிச்சயமாக நீதித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை! ஏனெனில் இந்த மறுக்கப்பட்ட நீதியைப் பெறுவதற்கு பல இலட்சம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! //

-லாக் ஆஃப்

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon