மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

தூய்மையில் பின்னோக்கிச் சென்றது திருச்சி!

தூய்மையில் பின்னோக்கிச் சென்றது திருச்சி!

மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி 6வது இடத்தில் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களில் தூய்மை இந்தியா திட்டமும் ஒன்று. மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மாநில அரசுகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரி வெங்கய்யா நாயுடு இன்று வெளியிட்டார். இக்கணக்கெடுப்பில் சுமார் 37 லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர். அதில் திருச்சி நகரம் 6வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் திருச்சி 3வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு திருச்சி மூன்று இடங்கள் பின்தங்கி 6வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இந்தூர், போபால், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் உள்ளன.

’தூய்மை இந்தியா 2017இல் இடம்பெற்றுள்ள நகரங்களின் விவரம்

1 இந்தூர்

2 போபால்

3 விசாகப்பட்டினம்

4 சூரத்

5. மைசூர்

6. திருச்சி

7. புதுடெல்லி

8. நவிமும்பை

9. திருப்பதி

10.வதோதரா

தமிழகத்தின் தலைநகரான சென்னை 235வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் குஜராத் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தில் அதிகமான நகரங்கள் மேம்பட்டுள்ளது என வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon