மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ரத்தன் டாடாவிடம் நிதி திரட்டும் ஓலா!

ரத்தன் டாடாவிடம் நிதி திரட்டும் ஓலா!

ஓலா டாக்சி நிறுவனம், ரத்தன் டாடாவின் ஆர்.என்.டி. முதலீட்டு நிறுவனத்திடமிருந்தும் ஃபால்கான் எட்ஜ் நிறுவனத்திடமும் ரூ.670 கோடி நிதி திரட்டுகிறது.

இந்தியாவின் முன்னணி டாக்சி போக்குவரத்து சேவை நிறுவனமான ஓலா, குறைந்த கட்டணத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஓலா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் டாக்சி நிறுவனம் இந்தியாவில் வழங்கி வரும் கடுமையான போட்டியைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகளை ஓலா மேற்கொண்டு வருகிறது. தனது சேவை விரிவாக்கத்துக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஓலா, சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் என்ற தொலைதொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனத்திடம் ரூ.1,675 கோடி (250 மில்லியன் டாலர்) நிதி திரட்டியிருந்தது.

இந்நிலையில், தற்போது ரத்தன் டாடாவின் ஆர்.என்.டி. கேப்பிடல் அட்வைசர்ஸ் மற்றும் ஃபால்கான் எட்ஜ் நிறுவனத்திடம் ரூ.670 கோடி நிதி திரட்டுகிறது ஓலா. ரத்தன் டாடா, கடந்த 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதலே ஓலா நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். தற்போது மேற்கொள்கிற முதலீட்டில் ரத்தன் டாடா ரூ.268 கோடியும், ஃபால்கான் எட்ஜ் நிறுவனம் ரூ.402 கோடியும் முதலீடு செய்கின்றன.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon