மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

டெல்லி Vs குஜராத் : யார் வெளியே?

டெல்லி Vs குஜராத் : யார் வெளியே?

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லியிலுள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்குப் போவதற்கு மிக முக்கியமானதாகும்.

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன்மூலம் தொடர் தோல்விகளுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. 9 ஆட்டங்களில் 3இல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று பற்றி யோசிக்க முடியும். இதில் ஒன்றில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு அவ்வளவுதான். எனவே, அந்த அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஐதராபாத்துக்கு எதிராக 186 ரன்களை ‘சேசிங்’ செய்ததும், உள்ளூரில் விளையாடுவதும் டெல்லி அணிக்கு நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். காயம் காரணமாக முந்தைய போட்டிகளில் ஆடாத ஜாகீர் கான் இந்தப் போட்டியிலும் விளையாடுவது உறுதியாகவில்லை. அவருக்குப் பதில் கருண் நாயர் கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.

குஜராத் அணி 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்வியைச் சந்தித்து 6 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும், ரன்ரேட்டில் நல்ல நிலையை எட்டி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே குஜராத்துக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பு ஏற்படும். எனினும், அந்த அணி புள்ளிப் பட்டியலில் கௌரவமான நிலையை அடைய முயற்சிக்கும். பேட்டிங்கில் வலிமை மிகுந்த குஜராத் அணிக்கு பந்துவீச்சு சரிவர கைகொடுக்காததால் இந்த ஐ.பி.எல். தொடரில் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon