மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா!

துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா!

தேனி மாவட்டத்தில் மாமன் -மைத்துனர்கள் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நேற்று நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெறும். இவ்விழாவின்போது மாமன், மைத்துனர்கள் சேத்தாண்டி வேடமிட்டு ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதன்மூலம் மாமன், மைத்துனர்களின் உறவு நீடிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். பேசிக் கொள்ளாத உறவினர்கள்கூட இந்த நிகழ்வில் பேசிக் கொள்வர். விழாவில், ஏராளமான பக்தர்கள், அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த விநோதத் திருவிழாவில், ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விநோத திருவிழாவைக் காண பக்கத்து கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon