மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

ஸ்டீல் : புதிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஸ்டீல் : புதிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

உள்நாட்டில் ஸ்டீல் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்டீல் கொள்கைக்கு (National Steel Policy 2017) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வருகிற 2030ஆம் ஆண்டுக்குள், நாட்டின் ஸ்டீல் உற்பத்தியை 300 மில்லியன் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, கூடுதலாக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய ஸ்டீல் கொள்கை ஒன்று வடிவமைக்கப்பட்டு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் நேற்று (04-05-2017) கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் அரசு நிறுவனங்களின் கட்டுமானத்துக்கு உள்நாட்டு ஸ்டீல் பொருட்களையே பயன்படுத்திக்கொள்ளும் மற்றொரு கொள்கைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்புதிய கொள்கையானது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்டீல் மற்றும் இரும்புப் பொருட்களை அரசே கொள்முதல் செய்யும் நடைமுறைக்கு வழிவகுக்கும். இக்கொள்கையின் மூலம் நாட்டின் ஸ்டீல் உற்பத்தி மற்றும் தரம் அதிகரிக்கும் என்றும், சர்வதேச சந்தையில் இந்தியாவால் கடும் போட்டியை வழங்க முடியும் என்று ஸ்டீல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இறக்குமதியை அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon