மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்ஸி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்ஸி!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ‘ஓப்போ’ மொபைல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இன்று (வியாழன்) நடைபெற்ற விழாவில் ஓப்போ லோகாவுடன் கூடிய ஜெர்சியை ஓப்போ செல்போன் நிறுவனத்துக்கான இந்தியத் தலைவர் ஸ்கை லி மற்றும் பிசிசிஐ தலைமை அதிகாரி ஜோரி ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ‘முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ 1079 கோடி ரூபாய்க்கு ஐந்து வருடத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டு ஒப்பந்தமானது, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி (2017) முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலானது. இந்த ஐந்தாண்டுகளுக்கிடையில் இந்தியா 14 உள்நாட்டு தொடரிலும், 20 வெளிநாட்டு தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி, ஐ.சி.சி. உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை தொடர் அடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon