மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

அனுஷ்கா சினிமாவுக்கு பாய்...பாயா?

அனுஷ்கா சினிமாவுக்கு பாய்...பாயா?

அனுஷ்காவின் முதல் திரைப்படம் 2005இல் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த ’சூப்பர்’ எனும் தெலுங்குத் திரைப்படமாகும். 2006இல், ’ரெண்டு’ எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், 'அருந்ததி' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதன்பின், இவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரத்தை எடுத்து நடித்து வருகிறார்.

இதற்குக் கிடைத்த பரிசாக பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் அமைந்தன. இதன்மூலம் அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நாயகியானார். சில மாதங்களாகவே அவர் குண்டாக இருப்பது முதல் பல விஷயங்கள் ஊடகங்களுக்கு லீக் ஆகிக்கொண்டே இருந்துள்ளது. குறிப்பாக, யாருக்குமே தெரியாத ஒருசில அந்தரங்க விஷயங்களும் லீக் ஆனதால் கடும் தர்மசங்கட நிலைக்கு ஆளான அனுஷ்கா, இந்த விஷயம் யாரால் லீக் ஆகிறது என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்குக் காரணம் இவர்களாகத்தான் இருக்கக்கூடும் என்று ஆதாரங்களுடன் தெரிய வர, உடனே லெப்ட் அண்ட் ரைட் வாங்கி அந்த கோலிவுட் உதவியாளரை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளார். அனுஷ்காவின் இந்த அதிரடியால் மற்ற உதவியாளர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தெலுங்கில் 3 படங்கள் கமிட் ஆனதை வேகவேகமாக முடித்துக் கொடுத்து வருகின்றாராம்.

மேலும் இவரின் திருமண அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பிரமாண்ட யோகா மையம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும், இனி தன் கவனம் முழுவதையும் அந்த யோகா மையத்தில்தான் என முடிவு எடுத்துள்ளாராம். இந்த முடிவால் அனுஷ்கா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon