மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தென்னாப்பிரிக்கா!

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தென்னாப்பிரிக்கா!

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்று, தென் ஆப்பிரிக்க நாட்டு மேலாளர் ஹென்னலி சிலேப்பர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘சுமார் 1,04,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் (2016) மட்டும் 95,377 இந்தியர்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 6300 பேர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

பதினெட்டு வயது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இந்திய இளைஞர்களை ஈர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்விதமாக 6 இந்திய மொழிகளில் பயணச் சலுகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளோம். கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை வாயிலாக 1.2 பில்லியன் ஜார் (தென்னாப்பிரிக்க நோட்டு) வருவாய் ஈட்டியுள்ளோம். சர்வதேச அளவில் இந்தியா எங்களுக்கு எட்டாவது மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பாவும்தான் எங்களுக்கு மிக முக்கிய பிரதான சந்தைகளாக உள்ளன’ என்று தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon