மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் பரவாயில்லை : ஜெயக்குமார்

பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் பரவாயில்லை : ஜெயக்குமார்

இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு பன்னீர் அணி வந்தால் நல்லது, வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் எங்களுடைய கதவுகள் திறந்தே இருக்கும் என்று, நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறி, இரு அணிகளும் பேச்சுவார்த்தை குழு அமைத்தனர். ஆனால் தற்போது வரை பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இரு அணியினரும் முரண்பட்டக் கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். மேலும் பன்னீர் அணியினர் தங்களுடைய இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், மே 4ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், 'இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பன்னீர் அணியினர் வந்தால் பேசுவோம், இல்லையென்றாலும் கவலையில்லை. நாங்கள் சசிகலா குடும்பத்துடன் தொடர்பில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டுதான் உள்ளோம்.

மேலும் ஸ்டாலின் கூறுகிறார், தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுகிறதென்று. ஆனால் மத்திய அரசு மிரட்டும் நிலையில் தமிழக அரசு இல்லை' என்று தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon